சிறுமியை தூக்கிச்செல்ல முயன்ற கழுகு : போராடி மீட்ட அன்னை

0
377
eagle attempted carry 4 year old girl Anuradhapura area

(eagle attempted carry 4 year old girl Anuradhapura area)

அனுராதபுரம் பிரதேசத்தில் வீட்டின் முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த 4 வயதான சிறுமி ஒருவரை வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது.

எனினும், கழுகு சிறுமியை நெருங்கிய போது அதனுடன் போராடிய சிறுமியின் தாய், குழந்தையை பாதுகாப்பாக காப்பாற்றியுள்ளார்.

பின்னர் கழுகை பிடித்த பிரதேச மக்கள் அனுராதபுரம் வன விலங்கு பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் 4 வயதான தெவ்மினி அமாயா என்ற சிறுமியே சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

கழுகினால் தாக்கப்பட்ட சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியின் முதுகு பக்கத்தில் கழுகின் நகக் கீறல்கள் இருப்பதாக மருத்துவமனைத் தரப்பினர் தெரிவித்தனர்.

குறித்த கழுகு இது போன்று ஏற்கனவே 4 சிறுவர்களை துரத்தி வந்து தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் அவர்கள் வீடுகளுக்குள் நுழைந்து கழுகிடம் இருந்து தப்பியுள்ளனர்.

ஆனாலும் பிரதேச மக்கள் இணைந்து பாதுகாப்பாக கழுகினை பிடித்து வனவிலங்கு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

(eagle attempted carry 4 year old girl Anuradhapura area)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites