மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

0
193

மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் கன மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கப் பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. (Continuous Rain Upper Kotmale reservoir three dam opening)

இதனால் நேற்று காலை வான்கதவு ஒன்று திறக்கப்பட்ட நிலையில், நீரின் உயர்மட்டம் வெகுவாக கூடுவதனால் இன்று காலை மேலதிகமாக இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

எனவே, அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்தோடு, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக, சென் கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Continuous Rain Upper Kotmale reservoir three dam opening