செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று

0
1295
Today 12th anniversary commemoration sencholai massacre

முல்லைத்தீவு செஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நினைவு நாள் இன்றைய தினம் நினைவுகூரப்பட்டது. (Today 12th anniversary commemoration sencholai massacre)

செஞ்சோலை சிறுமிகள் பராமரிப்பு நிலையத்தின் மீது கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி விமானப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்ட அதேவேளை, 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் தினமான இன்று காலை முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு உட்பட பல பிரதேசங்களில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் திருவுருவப்படம் வைத்து நினைவுகூரப்பட்டன.

செஞ்சோலைப் படுகொலையின் போது, கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 15 தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட க.பொ.த உயர் தரத்தில் கற்கும் மாணவிகள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Today 12th anniversary commemoration sencholai massacre