ஞானசார தேரரின் சத்திரசிகிச்சை ஒத்திவைப்பு – சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல்

0
486
stone kidney surgery postpone galagoda gnanasara thero

(stone kidney surgery postpone galagoda gnanasara thero)

சிறைத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நேற்றைய தினம் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அவரது இதயத் துடிப்பில் ஏற்பட்டுள்ள வித்தியாசமான செயற்பாடு காரணமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதாக வைத்தியசாலையின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி பிரபாத் வீரவத்த தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருடைய இதயத்தின் செயற்பாட்டில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையின்படி இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.

அதனால், தேரரயை நினைவு மறக்க செய்ய இவருடைய இருதயத் துடிப்பு மாற்றம் தடையாகவுள்ளது.

அதேவேளை, ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் 2 சென்ரி மீட்டர் அளவான கல் ஒன்று உள்ளதாகவும் இதனை அகற்றுவதற்கு நேற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட விருந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(stone kidney surgery postpone galagoda gnanasara thero)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites