சாயிஷாவுடன் காதல் வலையில் வீழ்ந்த பிரபுதேவா.. : கிளம்பிய கிசுகிசுக்கள்..!

0
321
Sayesha love Prabudeva Tamil news

நடனத்தில் மன்னனாக விளங்கிவரும் பிரபுதேவா, நடனம் தவிர்த்து காதலிலும் மன்னனாக வலம் வருகிறார். Sayesha love Prabudeva Tamil news

அதாவது இவர் தனது மனைவியை விவாகரத்து செய்த பின்பு நயன்தாராவை காதலித்தார். இருவருக்கும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேசப்பட்ட நிலையில் திருமணம் திடீரென ரத்தானது.

அதன் பின் இவர் இந்தி நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டார். இந்நிலையில், இப்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் சாயிஷாவுடன் இணைத்து பேசப்படுகிறார்.

பிரபுதேவாவைப்போல் சாயிஷாவும் நடனத்தில் வல்லவர். இவர் ஜெயம் ரவியுடன் ”வனமகன்”, கார்த்தியுடன் ”கடைக்குட்டி சிங்கம்”, ஆர்யா ஜோடியாக ”கஜினிகாந்த்” ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். சூர்யாவுடனும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி, சாயிஷா ஆகியோர் நடிக்க “கருப்பு ராஜா வெள்ளை ராஜா” என்ற படம் தயாராவதாக இருந்தது. ஆனால் படவேலைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

மேலும், அந்தப் படம் நின்று போனதாகவும் பேசப்படுகிறது. அந்த பட அறிவிப்புக்கு பிறகு பிரபுதேவா–சாயிஷா இடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது என்றும் இருவரும் நெருங்கி பழகுவதாகவும் திரையுலகில் பேசப்படுகிறது.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு சாயிஷா சென்னையில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது பிரபுதேவா நேரில் சென்று வாழ்த்தினார். மேலும், நடிகைகளின் பிறந்தநாள் விழாக்களில் கலந்து கொள்ளாத பிரபுதேவா சாயிஷாவை வாழ்த்த வந்ததை வைத்து இந்த கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)

விஜய் அழகானவர் – சூர்யா ரொம்ப நல்லவர் : பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்ரீ ரெட்டி..!

கமல் கட்சியில் சேர்ந்ததன் காரணம் இதுவே.. – அப்போ ரஜினி எதுக்காக..? : மறைமுகமாக தாக்கும் ஸ்ரீபிரியா..!

நான் அப்படித்தான் அடிப்பேன் : மீண்டும் சர்வாதிகாரியாகி கத்தும் பிக்பாஸ் ஐஸ்வர்யா..!

காதலை மறுத்த மகத் – கண்ணீர் விட்டுக் கதறிய யாசிக்கா : மீண்டும் குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

டேனியை இடித்து அடித்து மீண்டும் புதிய கலவரைத்தை ஏற்படுத்தும் மகத் : பிக்பாஸ் பரபரப்பு..!

ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறுவது சரிதான் : ஆதரவாக குரல் கொடுத்த ஆண்ட்ரியா..!

படப்பிடிப்பில் விபத்து : சிகிச்சைக்காக கொச்சி பறந்த நடிகை அமலாபால்..!

Tags :-Sayesha love Prabudeva Tamil news