புத்தளத்தில் கரையொதுங்கிய இரசாயன கழிவுகள் தொடர்பில் ஆராய விசேட குழு

0
590
Sri Lanka Tamil News, News

புத்தளம் கடற்கரையில் பல இடங்களில் கரையொதுங்கியுள்ள இரசாயன கழிவுகள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று அங்கு செல்லவுள்ளதாக கடல் பாதுகாப்பு சூழல் சபை தெரிவித்துள்ளது. Puttalam Chemical Analyse Special Comittee

இந்தியா கேரள மாநிலத்தில் இருந்து இந்த இரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

விசேடமாக பயிற்சியளிக்கப்பட்டுள்ள 5 பேர் கொண்ட குழு இன்று காலை கழிவுகள் கரையொதுங்கிய பகுதிக்கு செல்லவுள்ளதாக அந்த சபையின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

புத்தளம் – பெரியப்பள்ளி, சின்னப்பள்ளி, பள்ளியாவத்தை மற்றும் கந்துவ ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு இரசாயன கழிவுகள் கடந்த சில தினங்களாக கரையொதுங்கியுள்ள நிலையில், நேற்றைய தினம் கடல் பாதுகாப்பு சூழல் சபையின் குழுவொன்று அங்கு சென்று தரவுகளை சேகரித்தது.

இதேவேளை, அந்த இரசாயன கழிவுகளை தொட வேண்டாம் என அந்த சபை கோரியுள்ளது.