வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்; ஆளுநர்

0
528
Northern Provincial Ministers must resign governor's request

வடமாகாண அமைச்சர்கள் தாமாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வலியுறுத்தியுள்ளார். (Northern Provincial Ministers must resign governor’s request)

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்களுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே, வடமாகாண ஆளுநர் இவ்வாறு கூறியுள்ளார்.

வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவினால், வடமாகாண அமைச்சரவைக் கூட்டங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவினால், அமைச்சர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,

இதனால், மாகாண அமைச்சரவை முடிவுகளை எடுக்கவோ, சட்டங்களை நிறைவேற்றவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகி, புதிய அமைச்சர்களை நியமிக்க வழி செய்வது தான், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தற்போதுள்ள மிகச் சிறந்த வழிமுறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 154 (ஈ) பிரிவின் கீழ், முதலமைச்சரே அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் கொண்டவர் என்றும் ஆளுனர் என்ற வகையில் தனக்கு அமைச்சர்களை நியமிக்கவோ, நீக்கவோ அதிகாரம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, முதலமைச்சர் விக்னேஸ்வரன், இனிமேலும் தாமதிக்காமல் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Northern Provincial Ministers must resign governor’s request