(male body rescued Kalgavala Kalawewa National Park Anuradhapura)
அனுராதபுர மாவட்டத்தில் உள்ள கலாவெவ தேசிய பூங்காவில் கல்கொடவல பிரதேசத்தில் உருகுலைந்த நிலையில் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், சடலம் மீட்கப்பட்டுள்ள இடம் யானைகள் நடமாடும் பகுதியென தெரிவித்துள்ளது.
இவர் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் உறுதி செய்ய கல்கிரியாகம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் 40 முதல் 50 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்கலாம் என்றும், அவர் யார் என்பது குறித்து இதுவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலையில் சடலம் உருக்குலைந்து இருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
(male body rescued Kalgavala Kalawewa National Park Anuradhapura)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- 37 அரசாங்க பாடசாலைகள் மூட நடவடிக்கை
- யாழில் அதிகரிக்கும் வாள்வெட்டு ; பொலிஸார் வாகனப் பேரணி
- கத்தியைக் காட்டி 59 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்
- காட்டுக்குள் இரண்டு காதல் ஜோடிகள் செய்த செயல்
- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது
- 24 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்; இந்தியரான கோடீஸ்வர வர்த்தகர் கைது