அதுவரை பிரதமர் உயிருடன் இருப்பாரா என்பது சந்தேகம் – வடக்கு மக்கள் வன்முறையை ஆதரிக்க மாட்டார்கள் – அனுர

0
306
freed northern people not allow violence country again anura

(freed northern people not allow violence country again anura)

நாட்டில் மீண்டும் வன்முறைகள் தலைதூக்குவதற்கு வடக்கு மக்கள் எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதிக்கமாட்டார்கள் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தெற்கில் அனாவசியமான அச்சம் நிலவுகின்றது. ஆனால், வடபகுதி மக்கள் மீண்டும் வன்முறைகள் தலைதூக்குவதற்கு அனுமதிக்கமாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு எது தேவை எது சிறந்த விடயங்கள் என கதைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பசிலுக்கும் தகுதியில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 70 வருடங்களாக இரு பிரதான கட்சிகளும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் எவையும் தங்களிடம் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளன எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தனக்கு 32 வருடங்கள் தேவை எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கின்றார்.

அவருற்கு தற்போது 70 வயதாகிவிட்டது, இன்னும் 32 வருடங்கள் வரை உயிருடன் இருப்பாரா என்பதே சந்தேகம் எனவும் ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பத்து வருடங்களாக ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ச நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக மீண்டுமொருமுறை அதிகாரத்தை கோருகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(freed northern people not allow violence country again anura)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites