108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

0
615
Four arrested 108000 milligrams Kerala ganja

கொட்டகலை டிரேட்டன் பகுதியில் 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (Four arrested 108000 milligrams Kerala ganja)

ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த சுற்றிவளைப்பின் போது, குறித்த நபர்களால் இரகசியமான முறையில் மறைத்து வைத்திருந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கேரளா கஞ்சா விற்பனை மிகவும் சூட்சபமான முறையில் நீண்ட காலமாக இடம்பெற்று வந்துள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன், இதனுடன் தொடர்புடைய மேலும் சிலர் தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இவர்ளை இன்றைய தினம் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Four arrested 108000 milligrams Kerala ganja