திருப்பங்கள் இல்லாமல் திணறும் பிக்பாஸில் நுழையும் பிரபல நடிகர்!

0
195
Bigg boss tamil season 2 Analysis tamil news

தமிழில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சீசன் 2 ஆரம்பமாகி இன்னும் சில நாட்களில் இரண்டு மாதத்தைத் தொட உள்ளது. ஆனாலும், நிகழ்ச்சியில் கமல்ஹாசனைத் தவிர வேறு யாரும் பரபரப்பை ஏற்படுத்துவதே இல்லை. Bigg boss tamil season 2 Analysis tamil news

கடந்த பிக் பாஸ் சீசனில் ஓவியா, ஜுலி, ஆரவ், காயத்ரி, சக்தி, பிந்து மாதவி, ரைசா, சினேகன் என பலரும் ஒரு தனித் தன்மையுடன் இருந்தார்கள். ஒவ்வொருவரும் சில செய்கைகளால் தனித் தனியே ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

ஆனால், இந்த சீசனில் பங்கேற்றுள்ள யாருக்குமே எந்தவிதமான தனித் தன்மையும் இல்லை என்பது நிகழ்ச்சியின் பெரும் மைனஸ் பாயின்டாக உள்ளது. கமல்ஹாசனும், பிக்பாஸும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும், ஒருவருக்கொருவர் சண்டை மூட்டி பார்த்தும், நிகழ்ச்சியில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த முடியவில்லை.

முதல் சீசனில் இருந்த ஒரு சுவாரஸ்யம் இந்த சீசனில் இல்லை என்பதுதான் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்கும் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

முதல் சீசனில் 35 ஆவது நாளிலேயே ‘வைல்ட் கார்டு’ நுழைவில் பிந்து மாதவி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். ஆனால், இந்த சீசனில் 57 நாட்கள் கடந்தும் இன்னும் எந்த ஒரு ‘வைல்ட் கார்டு’ நுழைவும் வரவில்லை. பிந்து மாதவி மட்டுமல்லாது சுஜா வருணி, ஹரிஷ் கல்யாண், காஜல் ஆகியோர் அடுத்தடுத்து ‘வைல்டு கார்டு’ சுற்று மூலம் கடந்த சீசனில் பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தார்கள்.

நடிகை கஸ்தூரி உள்ளே செல்லப் போகிறார் என்ற வதந்தி பரவியது. கடைசியில் அவரே அதை மறுத்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுவிட்டார். தற்போது இந்த பிக்பாஸ் சீஸனை பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை ரொம்பவே குறைந்து விட்டது. கடந்த சீஸனில் பல கோடிகளை தொட்டமை குறிப்பிடத்தக்கது.

இப்பிடியே போனால் இந்த சீசனோடு விஜய் டிவி பிக்பாஸ் வீட்டை நிரந்தரமாக மூட வேண்டியது தான்.

tags :- Bigg boss tamil season 2 Analysis tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!

எமது ஏனைய தளங்கள்