தல – ஏ.ஆர் – தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் கொம்போ தகவல் பற்றி தீர்க்கமான மறுப்பு!!

0
322
Ajith 59 movie news false tamil news

ஹைதராபாத்தில் தனது 58 வது படமான, இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஸ்வாஸ்’ படத்தில் தல அஜித் நடித்து வருகிறார். Ajith 59 movie news false tamil news

இந்நிலையில் அஜித் தனது 59 படத்தை, தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர், எச். வினோத்தின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

மேலும் இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கவுள்ளதாகவும், ஏ.ஆர் ரஹ்மான் இசையமக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து, நேற்றைய தினம் போனிகபூரின் மனைவியும் நடிகையுமான ஸ்ரீதேவியின் பிறந்த நாள் என்பதால், அஜித்தின் அடுத்த படத்தின் பணிகளை தயாரிப்பாளர் என்ற முறையில் போனிகபூர் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இது பற்றி நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் விசாரித்த போது, இது ஒரு ஆதாரமற்ற வதந்தி எனவும், இப்படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி முடிவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Tags: Ajith 59 movie news false tamil news

எமது ஏனைய தளங்கள்