தனியார் பேரூந்துகளில் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு தடை

0
400
Television banned private buses

தனியார் பேரூந்துகளில் தொலைக்காட்சிப் பெட்டிகளை தடை செய்வதற்கு தேசிய போக்குவரத்து ஆணையத்தினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. (Television banned private buses)

கிழக்கு மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து பஸ் வண்டிகளில் இதனைக் கடுமையாக செயற்படுத்த மாகாண போக்குவரத்து ஆணையகம் தீர்மானித்துள்ளது.

தொலைக்காட்சி பெட்டிகள் காரணமாக பேரூந்து ஓட்டுநர்களின் கவனம் திசை திருப்பப்படுவதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொலைக்காட்சிப் பெட்டிகளின் காட்சிகள் பலரை அசௌகரியத்துக்கு உட்படுத்துவதனால் இந்த தடையை கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்த சிறப்பு சோதனை பிரிவினருக்கு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணையகத்தின் இயக்கம் மற்றும் திட்டமிடல் தொடர்பான இயக்குநர் சீ.எம். நந்தசேன கூறியுள்ளார்.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் போக்குவரத்தில் ஈடுபடும் பேரூந்து வண்டிகளில் தொலைக்காட்சி பெட்டியின் தடை ஏற்கனவே அமுலில் உள்ளது.

இந்த நிலையில், குறுகிய மற்றும் நீண்ட தூர பேரூந்துகளில் இந்த தடையை அமுல்படுத்த ஆரம்பித்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Television banned private buses