அடுத்து விக்கி யாருடன் கூட்டு? தேர்தல் நேரத்தில் தான் தெரியவருமாம்!

0
180
North Provincial Chief Minister CV Vigneswaran Statement

தம்முடன் கூட்டு சேர்ந்து அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் விடுத்துள்ள அழைப்புக் குறித்து வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து கூறியுள்ளார். North Provincial Chief Minister CV Vigneswaran Statement Tamil News

வட மாகாண சபைத் தேர்தலில் யாருடன் கூட்டுச் சேருவது என்று, தேர்தல் அறிவிக்கப்படும் போதே தீர்மானிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில் ,

“அடுத்த மாகாண சபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிட வருமாறு என்னை பலரும் அழைக்கிறார்கள். ஆனால் இது தொடர்பாக நான் அந்த நேரத்திலேயே முடிவெடுப்பேன்.

அடுத்த மாகாண சபை தேர்தலை எப்போது நடத்துவது என்ற முடிவு எடுக்கப்படாத நிலையில் அதற்கு இன்னமும் ஆறு, ஏழு மாதம் தாமதமாகலாம்.

எனவே, இது தொடர்பாக சிந்திப்பதற்காக நீண்டகாலம் இருக்கிறது.

இந்தநிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டு வைப்பதா -இல்லையா என்பது தொடர்பாகவும் நான் சிந்திப்பேன்” என்று தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites