விரைவில் இறக்கப்போகும் மகனைக் கண்ணீருடன் கரம் பற்றிய தாய்! நெஞ்சைப் பதற வைக்கும் காணொளி.

0
195
Mother married Son British tamil news

பிரித்தானியாவில் குறைந்த காலமே வாழவுள்ள தன்னுடைய 7 வயது மகனின் ஆசையை அவரது தாய் நிறைவேற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Logan Mountcastle. 7 வயது சிறுவனான இவனுக்கு கடந்த டிசம்பர் மாதம் சரி செய்ய முடியாத மரபணு நோய் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த சிறுவன் இன்னும் 3 ஆண்டுகளோ அல்லது 15 ஆண்டுகளோ தான் வாழ்வான் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.(Mother married Son British tamil news)

இந்நிலையில் இந்த சிறுவனின் அம்மாவான Joelean தன் மகன் எப்போது தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுவானே, அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் ஒரு போலித் திருமணத்தை தயார் செய்துள்ளார்.

அதன் படி அந்த சிறுவனுக்கும், அம்மாவுக்கும் Lincolnshire-ல் உள்ள Gainsborough Liberal Club-ல் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அப்போது சிறுவனுக்கு மாப்பிள்ளை அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. அம்மாவும் ஒரு மணப் பெண் போன்று உடை அணிந்து வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி சிறுவனுக்கு Beauty and the Beast என்ற திரைப்படம் மிகவும் பிடிக்கும் என்பதால், அந்த படத்தில் வரும் Beast மற்றும் Beauty போன்ற வேடத்தில் இரண்டு பேர் கலந்து கொண்டுள்ளனர்.

Beast மற்றும் Beauty வேடம் அணிந்தவர்களே சிறுவனை அந்த கிளப்பிற்குள் அழைத்து வருகின்றனர். அதன் பின் வரும் சிறுவனின் அம்மா, கையில் ஒரு மைக்கை பிடித்துக் கொண்டு, இந்த வினோத விழாவிற்கு வருகை தந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி எனவும், என்னுடைய மகன் எப்போது திருமணம் செய்து கொள்வேன் என்று கூறுவான், அதற்காக இந்த திருமணம் என்று கூறியுள்ளார்.

அப்போது தன் மகனின் சிரிப்பைக் கண்டு Joelean கண்ணீர்விட்டார்.

மேலும் இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், இது ஒரு உண்மையான திருமணம் இல்லை எனவும், சிறுவன் இன்னும் மூன்று ஆண்டுகளோ அல்லது 15 ஆண்டுகளோ வரை தான் உயிரோடு இருக்கப் போகிறார்.

இதனால் அவர் திருமணம் செய்துகொள்வதற்கு வாய்ப்பில்லை, மகனின் இந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஒரு திருமணம் போன்று அவரது தாயார் ஏற்பாடு செய்து மகனின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் என்று கூறியுள்ளது.

மேலும் திருமண சடங்கின் போது கூட, அவரது தாயார் நான் Logan Mountcastle-ஐ நான் நன்றாக அவரை பார்த்துக் கொள்வேன் என்று தான் உறுதியளித்தார் என்றும் தெரிவித்துள்ளது.

tags :- Mother married Son British tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
பொன்னம்பலத்தை வெளியே கூட்டி செல்ல பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் கமல்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!

எமது ஏனைய தளங்கள்