பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில்

0
529
Armed police security work Pamban Bridge

இந்தியாவின் சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் தமிழகத்துக்குள் ஊடுருவவுள்ளதாக மத்திய உளவுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ள தகவலை அடுத்து இராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். (Armed police security work Pamban Bridge)

இந்திய நாட்டின் 72 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் 15 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.

இந்த விழாவைச் சீர்குலைக்கும் வகையில் தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வெளியாகியுள்ள தகவலை அடுத்து தலைநகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் வெடிகுண்டை கண்டுபிடிக்கும் மெட்டல் டிரைக்;டர் கருவி மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாம்பன் பாலம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களையும் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னே அனுமதிக்கின்றனர்.

அதேபோன்று இராமேஸ்வரம் தீவுப் பகுதியும் பாதுகாப்பு வலையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்று காலையில் இருந்து மத்திய இருப்பு பாதை பொலிஸார் மற்றும் பட்டாளியன் படை பொலிஸார் ஆயுதம் ஏந்தி தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாம்பன் ரயில் பாலம், பேரூந்து நிலையம், மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பொலிஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Armed police security work Pamban Bridge