பதவி துறப்பாரா விக்கி?

0
390
governor responsibility resolving problems Northern Provincial Council

 

வடக்கு மாகாண அமைச்சரவையில் நெருக்கடி ஏற்பட் டுள்ள நிலையில் அதனை அடிப்படையடையாகக் கொண்டு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பதவி துறக்குமாறு அவருக்கு ஆலோசனை வழங்கும் நெருக்கமான சில தரப்புக்கள் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Vigneshwaran Resignation Ministerial Issues Tamil News

இதனூடாக மக்களின் அனுதாபங் களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அந்தத் தரப்புக்கள் சி.வி.விக்னேஸ்வரனுக்குச் சுட்டிக் காட்டியுள்ளதாகவும், எனினும் அந்த யோசனையை இதுவரையில் விக்கி ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறப்படுகின்றது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங் கிய தீர்ப்பால் வடக்கு மாகாண அமைச்சரவை மறுசீரமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சரை, டெனீஸ்வரனையும் உள்ளடக்கியதாக அமைச்சரவையைப் பரிந்துரைக்கு மாறு ஆளுநர் கேட்டுக் கொண்ட போதும், முதலமைச்சர் இதுவரை அதனைச் செய்யவில்லை. நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக தன்னால் அந்தப் பணியைச் செய்ய முடியாது என்று கூறிவருகின்றார்.

இதனால் வடக்கு அமைச்சரவை செயற்பட முடியாத நிலையில், வடக்கு மாகாணத்தின் நிறைவேற்று மற்றும் சட்டவாக்கச் செயற்பாடுகள் தேக்கமடைந்துள்ளன.

இதற்கிடையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்று தெரிவித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 7ஆம் திகதி முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்பட மூன்று அமைச்சர்களை மன்றில் தோன்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் நெருக்கடி நிலமைக்குள் தள்ளப்பட்டுள்ளார். இதிலிருந்து தப்பிப்பதற்கு – விடுபடுவதற்கு முதலமைச்சர் பதவியைத்துறப்பதே ஒரே வழி என்று விக்னேஸ்வரனுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் முடிவடைவதற்கு இன்னமும் 70 நாள்களே இருப்பதால், பதவி துறப்பதில் எந்தப் பிரச்சினையும் வராது என்றும், பதவிதுறப்பதன் ஊடாக, மக்களின் அனுதாப அலையைத் திரட்ட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைமை வடக்கு அமைச்சரவை நெருக்கடி குறித்து ஆராய்வதால், பதவி துறக்கும் ஆலோசனையை முதலமைச்சர் தற்போதைய நிலமையில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அறியமுடிகின்றது.