உள்நாட்டு போர் காரணமாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்று, மீண்டும் நாடு திரும்பிய மக்களுக்கான தூதரக பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடியுரிமைச் சான்றிதழ் பெற்றுக் கொடுப்பதற்கான நடமாடும் சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பமானது.(Mobility certificate immigrant people tamil news)
மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், ஒபர் சிலோன் அமைப்பின் அனுசரணையுடன் குறித்த நடமாடும் சேவை மன்னார் நகர மண்டபத்தின் கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.
புலம் பெயர்ந்து சென்று மீண்டும் நாடு திரும்பி மன்னார் மாவட்டத்தில் வசித்து வரும் மக்கள் குறித்த ஆவணங்களை பெற்றுக்கொள்ள பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் துரித கதியில் குறித்த ஆவணங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் குறித்த நடமாடும் சேவை இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் குறித்த சேவையானது, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையும், நாளை காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி இந்து சமய அலுவல்கள் அமைச்சு ஆகியவை இணைந்து இந்த நடமாடும் சேவையை ஆரம்பித்துள்ளன.
tags :- Mobility certificate immigrant people tamil news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய கொடியேற்றம் இன்று
- 37 அரசாங்க பாடசாலைகள் மூட நடவடிக்கை
- யாழில் அதிகரிக்கும் வாள்வெட்டு ; பொலிஸார் வாகனப் பேரணி
- 65 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் இருவர் கைது
- காட்டுக்குள் இரண்டு காதல் ஜோடிகள் செய்த செயல்
- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது
- 24 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்; இந்தியரான கோடீஸ்வர வர்த்தகர் கைது