தல ரசிகன் சிம்பு அவர் பாணியில் வில்லனாகிறார்…

0
244
Simbu acts negative role venkat prabhu movie tamil news

வெங்கட்பிரபு அடுத்து  இயக்கவிருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் நெகட்டிவ் ரோலில் சிம்பு நடிக்கிறார் எனத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.Simbu acts negative role venkat prabhu movie tamil news

தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ரிலீஸுக்குத் தயாராகி வரும் படம் ‘பார்ட்டி’. இந்தப் படத்தை டி.சிவா, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார்.

சத்யராஜ், ஜெயராம், ஜெய், ஷாம், சிவா, சந்திரன், நாசர், சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என ஏராளமான நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளனர். பிஜி தீவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படமானது கேங்ஸ்டர் காமெடிப் படமாகும்.

இந்த படத்தின் ரிலீசிற்குப் பிறகு, வெங்கட்பிரபு, சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இதில், சிம்புவுக்கு நெகட்டிவ் ரோல் எனத் தகவல்கள் கசிந்துள்ளது. கிட்டத்தட்ட ‘சொர்ணமுகி’ படத்தில் பார்த்திபன் போன்ற கேரக்டராம்.

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ செப்டம்பர் 28ம் திகதி ரிலீஸாக இருக்கிறது. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ தோல்விக்குப் பிறகு ரிலீஸாகும் சிம்பு படம் என்பதால், சிம்புவின் ரசிகர்கள் இந்தப் படத்துக்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

tags :- Simbu acts negative role venkat prabhu movie tamil news

<<RELATED CINEMA NEWS>>

இஷா குப்தா சொன்ன கிரிக்கெட் வீரர் இவரா?
குறைந்த சம்பளத்துக்கு இசையமைக்க அனிருத் ஒப்புதல்!!
இதுவரை நடிக்காத வேடத்தில் நயன்தாரா
கமலின் முடிவை ஏற்க மறுத்த மகள்மார்!!

 

எமது ஏனைய தளங்கள்