தி.மு.க.வில் மாநில அளவிலான பதவி வேண்டும் என்று மு.க. அழகிரி கேட்பதாகவும், இது குறித்து பொதுக்குழுவில் இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. reported Alagiri listening likely finalized General Assembly
தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது பற்றி ஆலோசனை நடத்த தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.
தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரிக்கு மீண்டும் பதவி அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் ஏற்கனவே கட்சி பொறுப்பில் இருந்தும் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மீண்டும் கட்சி பொறுப்பு வழங்க வேண்டும் என்று தி.மு.க.வின் ஒரு பிரிவினர் விரும்புகிறார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு போல தி.மு.க.வில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று தி.மு.க. மேலிடத் தலைவர்களும், கருணாநிதியின் குடும்பத்தினரும் விரும்புகிறார்கள்.
அதனால் மு.க.அழகிரியை மீண்டும் கட்சி பணிக்கு கொண்டு வரவும், அவருக்கு ஏற்கனவே வழங்கிய தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை மீண்டும் கொடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார்கள்.
ஆனால் மு.க.அழகிரி அந்த பொறுப்பை பெற விரும்பவில்லை என்றும், மாநில அளவிலான பதவி வேண்டும் என்று கேட்பதாகவும் தெரிகிறது.
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அனைத்து பொறுப்புகளிலும் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களின் பிரச்சனைகளை நேரடியாக ஆய்வு நடத்தும் அதிகாரம் இருந்தால் தான் தனக்கு கவுரவமாக இருக்கும் என்று அவர் விரும்புவதாக தெரிகிறது.
இந்த பொறுப்பை வழங்கினால் விரைவில் வர உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களையும் முன்னின்று எடுக்க தயாராக இருப்பதாக மு.க.அழகிரி தரப்பில் கூறப்படுகிறது. மு.க.அழகிரியின் விருப்பம் குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
மு.க.அழகிரி ஒதுங்கி இருக்காமல் கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். அதற்குரிய பதவி அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று கருணாநிதியின் குடும்பத்தினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் மு.க.அழகிரிக்கு விரைவில் பதவி வழங்கப்படலாம் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையில் உள்ளனர். reported Alagiri listening likely finalized General Assembly
இது குறித்து செயற்குழுவில் ஆலோசனை நடத்தப்பட்டாலும் பொதுக்குழுவில் தான் இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
- திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப மறுப்பு – போலீசாருக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி
- க.அன்பழகன் அவர்களை வீட்டில் ஸ்டாலின் திடீர் சந்திப்பு
- சிறுவன் ஒருவரினால் 14 கைதிகளுக்கு பிறக்கும் விடிவுகாலம்
- மீன் பிடிக்க செல்பவர்கள் காணாமல்தான் போகிறார்களா? – மீனவர்கள் கண்ணீருடன் போராட்டம்
- ஆகஸ்ட் 14-ல் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் – கட்சித் தலைமை நிர்வாகம்
- கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் : திருச்சி சிவா
- ஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு தண்டனை
- 4 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த மர்மநபர்கள்
- திமுக தலைவர் ஆகிறாரா..? ஸ்டாலின்… – அப்போ… கனிமொழி, அழகிரி?
- திருமுருகன் காந்தியை என்கவுண்டர் செய்ய சதியா? – எங்கிருந்து வந்தது லேசர் லைட் ..? (காணொளி)
- குடும்ப தகராறு காரணமாக இளைஞரை கட்டையால் அடித்தே கொன்ற பெண்கள்
- குடியிருப்பு பகுதிக்குள் சுற்றிய காட்டு யானை – நள்ளிரவில் பிடித்த வனத் துறையினர்
- கண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா