இதுவரை சேவையில் ஈடுபட்ட சில புகையிரதங்களும் இன்று நிறுத்தப்படும்

0
345
Railway Trade Unions called off planned strike August 29

(balance trains also stops service today Secretary Railway Drivers)

பணிநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட தருணம் தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த சில புகையிரதங்களும் இன்றையதினம் சேவையில் ஈடுபட மாட்டாது என்று புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

இதுவரையில், எந்தவித பேச்சுவார்த்தையோ அல்லது தீர்வோ கிடைக்காத காரணத்தால் புகையிரத தொழிற்சங்கங்களின் பணிநிறுத்தம் தொடர்ந்து இடம்பெறும் என்று இந்திக தொடங்கொட குறிப்பிட்டார்.

அதேநேரம் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்படும் புகையிரதங்களையும் இன்றைய தினத்துடன் நிறுத்திவிடுவதாக அவர் கூறியுள்ளார்.

நியாயமற்ற கோரிக்கைகளை தாம் முன்வைக்கவில்லை என்றும் தேவையென்றால் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தொழிற்சங்கம் தயார் என்றும் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

தற்போது புகையிரதங்கள் சில கொழும்பு கோட்டையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், நேற்று மாலையாகும் போது புகையிரத சேவையில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்ததாகவும் புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க கூறினார்.

(balance trains also stops service today Secretary Railway Drivers)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites