நாவற்குழி சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு நிவாரணம் தேவை! நாடாளுமன்றில் சுமந்திரன்!

0
703

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் சட்டவிரோதமாக தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் தங்க வைக்கப்பட்டுள்ள 107 குடும்பங்கள் வெளியேற்றப்படுவதாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Jaffna Parliament Member M A Sumanthiran Speech Tamil News

நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போது வீடமைப்பு அமைச்சர் சஜீத் பிரேமதாசவிடம் இவ்வாறு எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை கையகப்படுத்தி குறித்த 107 குடும்பங்களும் தங்கியுள்ளன.

தற்போது அந்த குடும்பங்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்வதுடன், அதுதொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

மிகவும் எளிமையான அவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றாமல், அவர்களுக்கான நிவாரணத்தை வழங்குமாறு சுமந்திரன், அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் சஜித், வெளியேற்றல் நிகழவில்லை என்றும், நிர்மாணப்பணிகளே இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டதோடு, இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினத்துக்குள் ஆய்வு செய்து தீர்வை வழங்குவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites