கத்தியைக் காட்டி 59 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்

0
801
59 year old girl sexually abusing knife

அனுராதபுரம் இசுறுபுர பிரதேசத்திலுள்ள வீடொன்றின் ஜன்னல்களைக் கழற்றி உள்ளே புகுந்து, 59 வயதான பெண் ஒருவருக்கு கத்தி ஒன்றை காண்பித்து, பயமுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் புரிந்து தப்பியோடிய நபரைக் கைதுசெய்ய அனுராதபுர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (59 year old girl sexually abusing knife)

இந்த பெண் தனது கணவனுடன் இந்த வீட்டில் வசித்து வந்துள்ளதோடு, இருவரும் வெவ்வேறு அறைகளில் நித்திரை கொண்டிருந்த போதே, குறித்த நபர் ஜன்னல் வழியாக வீட்டுனுள் புகுந்துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள பெண் திடீரென எழுந்த போது, தனது கட்டில் அருகில் ஒருவர் நிற்பதைக் கண்டு கூச்சலிட முயற்சித்தார்.

இதன்போது, குறித்த நபர் கத்தியொன்றை கழுத்தில் வைத்து கொலை செய்யப் போவதாகப் பயமுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த பின்னர் பின்கதவு வழியாக தப்பிச் சென்றுள்ளார்.

இந்தப் பெண்ணின் முறைப்பாட்டை அடுத்து அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 59 year old girl sexually abusing knife