24 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்; இந்தியரான கோடீஸ்வர வர்த்தகர் கைது

0
798
24 year old girl sex abuse

கொள்ளுப்பட்டிய பிரதேசத்திலுள்ள சூப்பர் ஹோட்டல் ஒன்றின் அறையினுள் குறித்த ஹோட்டலில் சேவை செய்யும் 24 வயதான பெண் ஊழியர் ஒருவரை, பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த சந்தேகத்தின் பேரில் 74 வயதான கோடீஸ்வர வர்த்தகரான இந்திய பிரஜை ஒருவரை கொள்ளுப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். (24 year old girl sex abuse Indian businessman arrested)

சந்தேக நபரான இந்த கோடீஸ்வர இந்திய வர்த்தகர் இலங்கையில் தொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்காக இலங்கையிலுள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரை சந்திக்கும் நோக்கத்துடன் வருகைதந்து தங்குவதற்காக இந்த சூப்பர் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.

இவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு இந்த பெண் ஊழியர் அழைத்துச் சென்ற போதே, குறித்த அறையினுள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த இளம் பெண் ஹோட்டலின் மேலாளருக்கு இந்தச் சம்பவம் பற்றி தெரிவித்த பின்னர் கொள்ளுப்பிட்டிய பொலிஸாரிடம் தெரிவித்த நிலையில், 74 வயதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹோட்டல் பெண் ஊழியர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான இந்திய பிரஜை திருமணமானவர் எனவும் இவருக்கு பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் உண்டு எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இந்தியப் பிரஜையின் கைது தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகருக்கு அறிவிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 24 year old girl sex abuse Indian businessman arrested