எம்.எல்.ஏ.வாக களமிறங்கிய சூர்யா : என்.ஜி.கே பட லேட்டஸ்ட் அப்டேட்..!

0
183
Surya Turns Politician NGK movie update tamil news

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் “என்.ஜி.கே.” படத்தில் நடித்து வரும் சூர்யா, அந்த படத்தில் எம்.எல்.ஏ.,வாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. Surya Turns Politician NGK movie update tamil news

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-

சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கி வரும் திரைப்படம் என்.ஜி.கே. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி இரவு பகலாக நடந்து வருகிறது.

இது ஒரு அரசியல் திரில்லர் படம் என்கிற செய்திகள் வெளியாகியுள்ள நிலையில். தற்போது. இப் படத்தில் சூர்யா கதாபாத்திரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. மேலும், சூர்யா இந்த படத்தில் நந்த கோபால குமரன் என்ற கதாபாத்திரத்தில் எம்.எல்.ஏவாக நடிக்கிறாராம்.

இதற்கு முன் 2004-ம் ஆண்டு வெளியான ஆயுத எழுத்து திரைப்படத்தில் மாணவர்கள் அரசியலில் வருவது போன்ற கதையில் சூர்யா நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில், நேரடி அரசியல்வாதியாக இந்த படத்தில் நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சூர்யாவுடன் ரகுல் பிரீத்தி சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

மேலும், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்ஆர்.பிரபு தயாரித்து வரும் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எஸ்.ஆர்.பிரபு சமீபத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)

அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் களமிறங்க தயாராகும் அஜித்தின் விஸ்வாசம்..!

கலைஞர் கருணாநிதி மறைவையொட்டி சர்கார் படப்பிடிப்பு இடைநிறுத்தம்..!

ஆடு – மாடுகளைப் போன்று அனைவரையும் பிரித்துக் காட்டுகின்றேன் : பிக்பாஸ் வைஷ்ணவி சவால்..!

2.0 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை : ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

விவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..!

ஐம்பதாவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகாது : ஹன்சிகா திடீர் தகவல்..!

Tags :-Surya Turns Politician NGK movie update tamil news