இலங்கை த்ரில் வெற்றி : கன்னி அரைசதத்தை அதிரடியாக பெற்றார் தசுன் சானக்க – Highlights

0
488
Sri Lanka won 4th ODI Sri Lanka vs South Africa Highlights

தென்னாபிரிக்காவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தனது முதல் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.(Sri Lanka won 4th ODI Sri Lanka vs South Africa Highlights ,Sri Lanka 24 Hours Online Breaking News,)

நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
கண்டி பல்லேகயில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாக வேண்டிய இந்தப் போட்டி மழை காரணமாக 2 மணித்தியாலங்கள் தாமதமாக ஆரம்பமானது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

ஆரம்பத்தில் 45 ஓவர்களாகவும் அதன்பின்னர் 43 ஓவர்களாகவும் பின்னர் 39 ஓவர்களாகவும் ஆட்டம் தடைப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஓவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க 36 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 34 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

தனது 200 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய ஏஞ்சலோ மெத்தியூஸ் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

2 சிக்சர்கள் 6 பவுன்டரிகளுடன் அதிரடியாக விளையாடிய குசல் ஜனித் பெரேரா 32 பந்துகளில் 52 ஓட்டங்களை விளாசினார்.

ஏழாவது விக்கெட்டில் திஸ்ஸர பெரேரா மற்றும் தசுன் சானக்க ஜோடி 109 ஓட்டங்களை பகிர்ந்தது.

திஸ்ஸர பெரேரா 45 பந்துகளில் 51 ஓட்டங்களை அதிரடியாக விளாசினார்.

ஒருநாள் அரங்கில் கன்னி அரைச்சதத்தை எட்டிய தசுன் சானக்க 5 சிக்சர்கள் 4 பவுன்டரிகளுடன் 34 பந்துகளில் 65 ஓட்டங்களை விளாசினார்.

இலங்கை அணி 39 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்களை பெற்றது.

தென்னாபிரிக்கா பதிலளித்தாட களமிறங்கிய நிலையில் மீண்டும் மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது.

இதனால், 21 ஓவர்களில் தென்னாபிரிக்காவின் வெற்றி இலக்கு 191 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

அந்த இலக்கை நோக்கி பதிலளித்தாட களமிறங்கிய தென்னாபிரிக்கா 51 ஓட்டங்களுக்கு முதல் 2 விக்கெட்களையும் இழந்ததோடு , அணித்தலைவர் குயின்டன் டி கொக் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஹாசீம் அம்லா 23 பந்துகளில் 23 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஜூ​யோன் போல் டுமினி 2 சிக்சர்கள் 3 பவுன்டரிகளுடன் 23 பந்துகளில் 38 ஓட்டங்களை விளாசினார்.

தென்னாபிரிக்கா வெற்றி இலக்கை இலகுவாக கடந்து விடும் என நினைத்தாலும், 12 ஓவரில் 2 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.

தொடர்ந்து வந்த வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் தென்னாபிரிக்காவின் வெற்றிக்கு இறுதி ஓவரில் 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அந்த ஓவரை வீசிய சுரங்க லக்மால் இரண்டாவது பந்திலேயே டேவிட் மில்லரை போல்டாக்கினார்.

இதனையடுத்து இலங்கை அணியின் வெற்றி ஓரளவு உறுதியாகிய நிலையில் கடைசி பந்தில் தென்னாபிரிக்காவின் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அந்த பந்தில் 2 ஓட்டங்கள் மட்டுமே பெறப்பட்டதுடன் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி 3 ஓட்டங்களால் த்ரில் வெற்றி பெற்றது.

சுரங்க லக்மால் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இது 11 சர்வதேச ஒருநாள் போட்டி தோல்விகளுக்கு பிறகு இலங்கை அணி அடைந்த முதல் வெற்றியாகவும் பதிவானது.

சகலதுறைகளிலும் பிரகாசித்த தசன் சானக்க போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை வென்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags:Sri Lanka won 4th ODI Sri Lanka vs South Africa Highlights ,Sri Lanka 24 Hours Online Breaking News,