(sri lanka army bus drive railway trade union action tamilnews)
நாடளாவிய ரீதியாக நடைபெற்று வருகின்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோன்றும் மாணவர்கள் நலன் கருதி பேருந்துகளை செலுத்துவதற்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
புகையிரத ஊழியர்கள் மேற்கொண்டுள்ள பணிநிறுத்தம் காரணமாக அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
அதேநேரம் புகையிரத பருவகால சீட்டை வைத்துள்ள பயணிகள் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் இலவசமாக பயணிக்க முடியும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதேவேளை, புகையிரத செலுத்துனர் மற்றும் காப்பாளர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரமணாக இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் அதன் வீதி அனுமதிப் பத்திரத்தை கருத்திற்கொள்ளாது சேவையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
புகையிரத வேலை நிறுத்தம் நிறைவு பெறும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை எப்பொழுது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(sri lanka army bus drive railway trade union action tamilnews)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
- UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
- புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
- மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
- சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்