இலங்கையை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் – ரணில் அழைப்பு

0
450
Ranil Wickramasinghe called war situation diasporas return Sri Lankans

(Ranil Wickramasinghe called war situation diasporas return Sri Lankans)

நாட்டில் இடம்பெற்ற உள்ளக போர் சூழலின் போது நாட்டை விட்டு வெளியேறிய சகல இலங்கையர்களையும் மீண்டும் நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டுக்கு திரும்பி வரும் மக்களுக்கு சகல உதவிகளையும் வழங்க தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், யுத்தத்தின் போது நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள் குறித்து பிரதமரிடத்தில் கேள்வி எழுப்பிய போதே பிரதமர் தனது பதிலை வழங்கினார்.

இதுகுறித்து பிரதமர் மேலும் கூறுகையில், நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

இலங்கை மக்கள் உள்நாட்டில் சுதந்தரமாக வாழ வேண்டும்.

ஆகவே யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய சகல இலங்கையர்களும் மீண்டும் வரவேண்டும். இதற்காக அரசாங்கம் என்ற வகையில் நாம் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

நாட்டுக்கு திரும்பி வரும் மக்களுக்கு சகல உதவிகளையும் வாழ்வாதார நடவடிக்கைகளையும் பெற்றுக்கொடுக்க நாம் தயாராக உள்ளோம்.

அதேபோல் அகதிகளாக வெளியேறி இப்போது நாடு திரும்பியுள்ள மக்களின் நிலைமைகள் குறித்தும் நாம் ஆராய்ந்து அவர்களுக்கான அடுத்த கட்ட உதவிகளை செய்து கொடுப்பது குறித்தும் துரித நடவடிக்கைகளை முன்னெடுகின்றோம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

(Ranil Wickramasinghe called war situation diasporas return Sri Lankans)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites