இன்று வித்தியா படு­கொலை வழக்­கு மேன்­மு­றை­யீட்டு விசா­ரணை!

0
479

யாழ் புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை வழக்­கில் ட்­ரயல் அட்பார் நீதி­மன்­றினால் 7 எதி­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட மரண தண்­டனைத் தீர்ப்பை எதிர்த்து குற்­ற­வா­ளி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட மேன்­மு­றை­யீட்டின் மீதான விசா­ர­ணை­யா­னது இன்­றைய தினம் உயர் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. Pungudutivu Vidya Murder High Court Hearing Today Tamil News

இந்த மேன்முறை­யீட்டின் மீதான விசா­ர­ணை­யா­னது 5 நீதி­ய­ர­சர்­களை உள்­ள­டக்­கிய நீதி­ய­ர­சர்கள் குழுவினர் முன்­னி­லை­யி­லேயே இடம்­பெ­ற­வுள்­ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு குறித்த மாணவி பாட­சாலை செல்லும் போது கடத்திச் செல்­லப்­பட்டு கூட்டு பாலியல் வல்­லு­றவின் பின்னர் கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இக் கொலைச் சம்­பவம் தொடர்­பாக சட்­டமா அதி­பரால் தாக்கல் செய்­யப்­பட்ட குற்றப் பத்­திரம் மீதான வழக்கு விசா­ர­ணை­யா­னது தமிழ்மொழி பேசும் 3 மேல் நீதி­மன்ற நீதி­ப­திகள் அடங்­கிய ட்ரயல் அட்பார் நீதி­மன்­றினால் விசா­ரணை செய்­யப்­பட்டு தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டி­ருந்­த­து.

இதன்­படி குற்­றஞ்­சாட்­டப்­பட்ட 9 சந்­தே­க­ந­பர்­களில் இருவர் நிர­ப­ரா­தி­கள் என தீர்ப்பளிக்கப்பட்டு விடு­தலை செய்­யப்­பட்ட நிலையில் ஏனைய 7 பேருக்கும் கடந்த வருடம் ட்ரயல் அட்பார் நீதி­மன்றால் மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட அந்த 7 குற்­ற­வா­ளி­களும் தமக்கெதி­ரான தண்­ட­னையை எதிர்த்து தமது தரப்பு சட்­டத்­த­ர­ணிகளினூடாக மேன்­மு­றை­யீடு செய்­தி­ருந்­தனர்.

இதன்­படி இந்த வழக்கின் விசாரணையானது இன்­றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ள­துடன் அதற்­காக தண்­டனை விதிக்­கப்­பட்ட கைதிகள் 7 பேரையும் உயர் நீதி­மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்­து­மாறு சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites