13 வயதில் கடத்தப்பட்ட சிறுமி 15 வருடங்களாக துஷ்பிரயோகம்

0
471
Indonesia Girl Black Magic Tamil News

 

இந்தோனேஷியாவில் 13 வயதில் கடத்திய சிறுமியை 15 ஆண்டுகளாக மந்திராவதி ஒருவர் பாலியல் அடிமையாக வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Indonesia Girl Black Magic Tamil News

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுமி ஒருவரை அவரது பெற்றோர், உடல்நலக்குறைவு காரணமாக அப்பகுதியில் உள்ள மந்திரவாதியிடம் அழைத்து சென்றனர். அப்போது அந்த மந்திரவாதி சிறுமிக்கு பூஜை செய்ய வேண்டியுள்ளதால் அவரை தன்னிடம் விட்டுவிட்டு பின்னர் வந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனை நம்பி சிறுமியின் பெற்றோரும் அவரை மந்திரவாதியிடமே விட்டு சென்றுள்ளனர். பின்னர் வந்து கேட்டபோது சிறுமி தலைநகர் ஜகார்த்தாவுக்கு வேலை தேடி சென்றுள்ளார் என கூறியுள்ளார்.

மந்திரவாதி கூறியதை கேட்டு அப்படியே சென்றுவிட்டனர் சிறுமியின் பெற்றோர். ஆனால் சிறுமியிடம் இருந்து எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

சுமார் 15 ஆண்டுகள் கழிந்தோடிவிட்டன. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மந்திரவாதியின் வீட்டின் அருகே உள்ள குகையில் இருந்து அந்த சிறுமி 28 வயது பெண்ணாக மீட்கப்பட்டுள்ளார்.

28 வயதான அந்த பெண்ணை போலீசார் ஹெச் என அழைக்கின்றனர். ஹெச்சிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது தன்னை அருகில் உள்ள குகையில் அடைத்த அந்த மந்திரவாதி அம்ரின் என்ற இளைஞர் முன்ஜென்மத்தில் அந்த சிறுமியின் காதலனாக இருந்ததாக கூறி ஒரு போட்டோவை காண்பித்து நம்ப வைத்துள்ளார்.

பின்னர் அந்த இளைஞரின் ஆன்மா தன்னுள் புகுந்திருப்பதாகவும் அவர் சிறுமியுடன் செக்ஸ் உறவு வைக்க விரும்புவதாகவும் கூறி கடந்த 15 ஆண்டுகளாக அவரை செக்ஸ் அடிமையாக வைத்து தனது காமவெறியை தீர்த்து வந்துள்ளார்.

பகல் நேரம் முழுவதும் ஹெச் குகையில் அடைத்து வைக்கப்படுவார் என்றும் இரவு நேரத்தில் மட்டும் மந்திரவாதியின் வீட்டின் அருகே உள்ள குடிசையில் தங்க வைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல முறை கருத்தரித்த அவருக்கு கருக்கலைப்பு மாத்திரைகளையும் வாங்கி கொடுத்துள்ளார் அந்த மந்திரவாதி. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், அந்த மந்திரவாதிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைப்பது உறுதி என்றும் மேலும் பல தண்டனைகள் கிடைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஹெச்சின் சகோதரி அந்த மந்திரவாதியின் மகனை திருமணம் செய்துள்ளதால், இதில் அவருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட ஹெச்சின் குடும்பத்தினர் மந்திரவாதியின் மேல் உள்ள அச்சத்தால் எதையும் கூற மறுக்கிறார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன் ஜென்ம காதலனின் ஆவி தன் மேல் இருப்பதாக கூறி 13 வயதில் கடத்திய சிறுமியை 15 ஆண்டுகளாக மந்திரவாதி ஒருவர் செக்ஸ் அடிமையாக குகையில் மறைத்து வைத்து தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.