நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்கள் அதிருப்தி – அர்ஜுன ரணதுங்க

0
323
sri lankan public lost hope good governance government arjuna

(sri lankan public lost hope good governance government arjuna)

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தினால் தற்போதைய அரசாங்கம் தொடர்பில் மக்கள் அதிருப்தி கொண்டிருப்பதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று (08) அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மஹா நாயக்க தேரர்களை சந்தித்து அவர்களின் ஆசிகளை பெற்ற அமைச்சர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், ”நான் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு தேசிய விளையாட்டு வீரர்களை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தயாரித்தேன்.

ஆனால், அது அமைச்சரவையினால் நிராகரிக்கப்பட்டது.

எனினும், எனது கடமையை நான் சரியாக செய்தேன்.

நான் இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தமைக்கு காரணம் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக, தேசிய விளையாட்டு வீரர்களுக்கு அரச வேலைவாய்ப்பை வழங்கும் நோக்குடன் தயாரித்த அமைச்சரவைப் பத்திரத்தை போன்றதேயாகும்.´ என்று அவர் தெரிவித்துள்ளார்.

(sri lankan public lost hope good governance government arjuna)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites