`பாண்டிமுனி’ படப்பிடிப்பின்போது நிகழ்ந்த ஆச்சரியங்கள்

0
306
Pandi Muni Movie Shooting surprises tamil news
‘பாண்டிமுனி’ படம் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பில் ஹீரோயின் சாமியாடியதும், கேமராக்கள் பறக்காததும் போன்ற சில நிகழ்வுகள் படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. Pandi Muni Movie Shooting surprises tamil news
கோத்தகிரி மற்றும் ஊட்டி பகுதிகளில் 25 நாட்கள் பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு  இடம்பெற்றது. கதாநாயகனாக ஆசிப் என்ற மாடல் நடிக்க, நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா ஆகியோர் இப்படத்தில் அறிமுகமாகிறார்கள். மேலும், ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்திலும், ஷாயாஜி ஷிண்டே முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர்.
இது பற்றி கஸ்தூரி ராஜா பேசிய போது, இந்த படம் பயங்கரமான ஹாரர் பின்னணியைக் கொண்டது. 70 வருடங்களுக்கு முன்னர் காட்டுப்பகுதியில் இருந்த அரண்மனைக்குள் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. படபிடிப்பின் போது, நாயகி மேகாலிக்கு சாமி வந்து ஆடவே செய்வதறியாது நாங்கள் நின்றிருந்தோம். உடனே  அங்கு நின்றிருந்த ஊர்மக்கள் கூடி பரிகார பூஜை செய்த  பிறகே சாமியாட்டம் நின்றது. பின்னர் சற்று நேரத்தில் பனகுடி சோலையில் குட்டஞ்சாமி கோயிலை சுற்றி பறந்து திரிந்த ஹெலிகேம், கோயிலுக்கு மேல் பறக்கவில்லை. அதுவும் ஒரு ஆச்சர்யம் தான், என்றார்.
tags :- Pandi Muni Movie Shooting surprises tamil news
<<MOST RELATED CINEMA NEWS>>
“படித்தவுடன் கிழித்துவிடவும்” – இன்சூரன்ஸ் மோசடி திரைக்கதையில் உருவாகும் படம்
கண்ணடித்து கிறங்கடித்தவரின் படம் சிக்கலில் – இயக்குனர் விளக்கம்
ஹிந்தி படம் இயக்குகிறாரா பா.ரஞ்சித்?
அட்லீ இயக்கும் படத்தில் விஜய்யின் ஜோடி இவரா?
ஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்
மீண்டும் தன்னைப் பற்றிய சர்ச்சைக்கு பதிலளித்த சாய்பல்லவி….

 

எமது ஏனைய தளங்கள்