கமலுக்கு முன்னமே ஆண்டவர் என்றால் கலைஞர் தான்! புல்லரிக்க வைக்கும் வரலாறு!

0
553

தமிழகத்தை மட்டுமல்ல தமிழையும் ஆண்டவர் கருணாநிதி. கருணாநிதியின் நெருங்கிய நண்பர் ஒருவர் இவரை ஆரம்பக் காலத்தில் ஆண்டவர் என்றே கூறி அழைத்தாராம். Former tamil nadu chief minister karunanidhi History Tamil News

அது யார் என்று தெரிந்தால் நீங்கள் வியப்பில் ஆழ்ந்து போக வாய்ப்புகள் அதிகமுண்டு.

ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பதை அவர் இறந்த போன நாட்களில் இருந்து கணக்கிட்டு தெரிந்துக் கொள்ளலாம் என்று கூறியவர் கலைஞர் கருணாநிதி.

கலைஞர் நூறாண்டுகளை நூலிழையில் தவறவிட்டிருந்தாலும் தமிழும், தமிழ் நாட்டு அரசியலும் கலைஞரை எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் தவறவிடாது.

கலைஞரும் தமிழும் பிரிக்க முடியாத ஒன்று. முக்கியமாக அவரது மேடை பேச்சுக்கும். நாசூக்காக அவர் கிண்டலடிக்கும் முறையில் பலரும் ரசித்து கேட்பதுண்டு. தனது பகைவராயினும் மனம் புண்படாதபடி பதிலடி கொடுப்பதில் வல்லவர்.


கலைஞர் கருணாநிதி எழுத்தாளர் என்று யாவரும் அறிவார்கள். ஆனால், அவர் நடத்திய முதல் பத்திரிக்கை பற்றி வெகுசிலர் மட்டுமே அறிவார்கள். அவர் நடத்திய முதல் பத்திரிக்கை மாணவர் நேசன் என்பதாகும். இது கைகளால் எழுதி விற்ற பத்திரிக்கை ஆகும்.

கருணாநிதியின் எழுத்துக் குறித்து பேச வேண்டும் என்றாலே பெரும் காலம் வேண்டும்.

அதிலும் குறிப்பாக இவரது எழுத்து மூலம் நடிப்பில், சினிமா துறையில் சிகரம் தொட்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.

அதில் நடிகர் திலகமும், புரட்சி திலகமும் அடங்குவர். கலைஞர் கருணாநிதி அவர்கள் இயற்றிய முதல் நாடகம் பழனியப்பன்.

இது திருவாரூர் பேபி டாக்கீஸ் என்ற அரங்கில் அரங்கேற்றம் ஆனது.

இன்று ஆண்டவர் என்றால் பலருக்கும் கமலஹாசனை நினைவிற்கு வரும். ஆனால், புரட்சி தலைவர், மக்கள் திலகம், கருணாநிதியின் நெருங்கிய நண்பர் எம்ஜிஆர் தன் ஆசை தோழன் கருணாநிதியை ஆண்டவரே என்று தான் ஆரம்பக் காலத்தில் அழைத்து வந்தாராம்.

எம்ஜிஆர் – கருணாநிதி கடந்த நூற்றாண்டின் சிறந்த நண்பர்களில் குறிப்பிடக் கூடியவர்கள். ஆனால், எதிர்பாராதவிதமாக சிறந்த நபர்கள் ஒருவரை எதிர்த்து ஒருவர் அரசியலில் களம் காண வேண்டிய சூழலும் பிறந்தது. இவர்கள் இருவரின் நட்பும் சேலம் மாடர்ன் தியேட்டரில் உதயமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites