பெண்ணும் மூன்று கணவர்மார்களும் சேர்ந்து பிள்ளைகளுக்கு செய்த கேவலமான செயல்; இலங்கையில் பதிவான சம்பவம்

0
785

மரத்தில் இருந்து வீழ்ந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி ஒருவரின் உதவிக்கு நியமிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் குடும்ப விபரம் மற்றும் சிறுமியின் சகோதரிகளும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்வதாக அறிந்த தாதிமார்கள், இந்தத் தகவலை ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். (five daughters mother disgraceful act)

பெந்தொட்டை, மிரிஸ்வத்தை பிரதேசத்தில் வசிக்கும் இந்த சிறுமியின் தாயின் முதலாவது திருமணத்தில் இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

இவர்களின் தந்தை பக்கவாதம் ஏற்பட்டு வீட்டில் முடக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களின் தாய் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்படுத்தி, பின்னர் இந்த கள்ளக்காதலனும் இவர்களுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்துள்ளனர்.

மேலும், குறித்த தாய் மூன்று பெண் பிள்ளைகளை பெற்றுள்ளார். ஐந்து பெண் பிள்ளைகளின் தாயான இவர், மற்றுமொரு நபருடன் கள்ளத்தொடர்ப்பு ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

இதன்பின்னர் தனது பிள்ளைகளை விட்டுப் பிரிந்து இரண்டாவது கள்ளக் காதலனுடன் குருநாகல் பிரதேசத்தில் குடியேறியுள்ளார்.

இதன்போது, தனது இரண்டாவது கணவனுக்கு பிறந்த மூன்று பிள்ளைகளின் மூத்த மகளான 11 வயது சிறுமியையும் அழைத்துச் சென்றுள்ளார்.

இதனால் முதல் கணவனுக்கு பிறந்த இரு மகள்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நோயுற்ற முதல் கணவனும், இரண்டாவது கணவனும் மற்றும் நான்கு பிள்ளைகளும் பெந்தொட்டை, மிரிஸ்வத்தை பிரதேசத்தில் வசித்து வந்துள்ளனர்.

இந்தப் பெண்ணின் மூன்றாம் கணவனால் குருநாகல் இல்லத்தில் வைத்து 11 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்த தாயும் மற்றும் இவளின் மூன்றாவது கணவனும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சிறுவர் பராமரிப்பில் இருந்த தனது மூத்த மகளை சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இந்த குறித்த பெண்ணின் இரண்டாவது கணவன் மிரிஸ்வத்தை இல்லத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

முதல் கணவனின் மூத்த மகள் மணமுடித்து தனியே வாழ்ந்து வருவதுடன், நோயுற்றுள்ள தந்தையையும் மற்றும் மூன்று சகோதரிகளையும் கவனித்து வந்துள்ளார்.

முதல் திருமணத்தின் இரண்டாவது மகள் இந்த வருடம் க.பொ.த (சா/த) பரீட்சையில் தோற்றவுள்ளார்.

இந்த நிலையில் இந்த தாயின் மூத்த சகோதரனின் மகன் ஒருவன் இந்த வீட்டுக்கு வந்துள்ளதோடு, இந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ளார்.

இதனை தனது சிறிய தந்தையிடம் கூறியபோதும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பலமுறை இந்த இளைஞன் இந்த மாணவியை பாலியல் கொடுமை செய்துள்ளார்.

எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத இந்த சிறிய தந்தையும் தனது பாலியல் ஆசைகளை இந்த மாணவியினால் பூர்த்தி செய்துகொண்டுள்ளார்.

தற்போது இந்த சிறுமி ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளதாக வைத்திய பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த சிறுமியின் சிறிய தந்தை தனது மூன்று மகள்களையும் எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

இந்த சிறுமியின் தாயின் மூத்த சகோதரனின் 24 வயதான மகனை கைதுசெய்து எல்பிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, சந்தேக நபரை 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கர்ப்பிணியான இந்த சிறுமியை திருமணமான அவளின் மூத்த சகோதரியிடம் ஒப்படைக்குமாறும், நோயுற்ற இவர்களின் தந்தையை சமூக சேவை திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த சிறுமியின் சிறிய தந்தையையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; five daughters mother disgraceful act