கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியபொழுது அப்பா… அப்பா …என கதறி அழுத ஸ்டாலின்

0
609

கண்ணாடி பேழைக்குள் உள்ள கருணாநிதியின் உடலை பார்த்து ஸ்டாலின் கதறி அழுதுள்ளார். கருணாநிதி கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.When Karunanidhi’s funeral began, Daddy … daddy cried Stalin,india tamilnews

இதையடுத்து அவருக்கு மெரினாவில் இறுதி சடங்குகள் மேற்கொள்ள தமிழக அரசிடம் அனுமதி கேட்டது திமுக. ஆனால் தமிழக அரசோ அதற்கு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்க செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை கேட்டதும் கருணாநிதியின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தனர். தன் தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்ற முடியாத தனயன் என்ற நிலை வந்து விடுமோ என்ற மனதுக்குள்ளேயே விம்மிக் கொண்டிருந்த ஸ்டாலின் திடீரென தொண்டர்களை பார்த்து கைகூப்பி கதறி அழுதார்.

ஏனெனில் நேற்று முதல் தொண்டர்கள் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நடைபெறுவதற்காக ராணுவ வாகனம் வந்துவிட்டது.

இதனால் தன் தந்தையை இனி எப்போதும் பார்ப்போம் என்று செல்வி, தமிழரசு உள்ளிட்டோர் அழுது கொண்டிருந்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவராக கடைசியாக கருணாநிதிக்காக அழுதனர். இதையடுத்து ஸ்டாலினும் கடைசியாக அவரது தந்தை பார்த்து கதறி அழுதார் அழுதுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :