யாழ் பலாலி வீதியில் நினைவு தூபி விஷமிகளால் உடைப்பு!

0
781

1989ஆம் ஆண்டு இந்­திய இரா­ணு­வத்­தின் காலத்­தில் பலாலி வீதி­யில் ஆல­டிச் சந்­தி­யில் இடம்­பெற்ற வெடி விபத்­தில் வீரச்­சா­வ­டைந்த 4 புலி­கள் மற்­றும் 6 பொது மக்­க­ளின் நினை­வாக 1990ஆம் ஆண்டு கிராம மக்­க­ளால் ஆல­டிச் சந்­தி­யில் அமைக்­கப்­பட்ட நினை­வுத் தூபி அடித்­து­நொ­றுக்­கப்­பட்­டுள்­ளது. Jaffna Palaly Road IPKF LTTE Memorial Statue Destroyed Tamil News

கடந்­த­கா­லப் போரா­லும், இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­பா­லும் அழி­வ­டை­யாது, அழிக்­கப்­ப­டாது பாது­காக்­க­பப்­பட்ட நினை­வுத் தூபி 28 ஆண்­டு­க­ளின் பின்­னர் நேற்று அடித்து நொறுக்­கப்­பட்­டுள்­ள சம்பவம் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.

2010ஆம் ஆண்­டு­வரை இரா­ணு­வக் காவ­ல­ரண் இருந்த காலத்­தி­லும் அந்த நினை­வுத் தூபி முழு­மை­யா­கக் காணப்­பட்­டது. 2010ஆம் ஆண்டு பலாலி வீதி­யின் அக­லிப்­புப் பணி­க­ளின் போது வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை­யி­னர் அந்­தத் தூபியை அடி­யோடு கிழப்பி மறு­க­ரை­யில் வைத்­தி­ருந்­த­னர்.

இந்த நிலை­யில் நேற்று அந்­தத் தூபி நொறுக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தப் பகு­தி­யைச் சேரர்ந்­த­வர்­களே இந்த நாச­கார வேலை­யைச் செய்­த­னர் என்று தெரி­விக்­கப்­ப­கி­றது. சம்­ப­வம் தொடர்­பில் மக்­கள் விச­னத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites