பிரித்தானியாவில் மாயமான பெண் 8 நாட்களுக்கு பின்னர் சடலமாக கண்டுபிடிப்பு: 3 பேர் கைது

0
121
woman Britain found dead after 8 days 3 people arrested

பிரித்தானியாவில் மாயமான இளம்பெண் ஒருவர் 8 நாட்களுக்கு பின்னர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. woman Britain found dead after 8 days 3 people arrested

பிரித்தானியாவின் stockton brook பகுதியை சேர்ந்தவர் Samantha Eastwood (32). 6 ஆண்டுகளாக Royal Stoke பல்கலைக்கழக வைத்தியசாலையில் ஊழியராக பணியாற்றி வந்த Samantha கடந்த ஜூலை 27ம் திகதி பணி முடிந்து வீடி திரும்பியதில் இருந்து மாயமாகியுள்ளார்.

மீண்டும் மாலை பணிக்கு திரும்பாததை அறிந்த வைத்தியசாலை நிர்வாகம் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளது. இதனடிப்படையில், Samantha-வின் சகோதரி Gemma Eastwood (26) பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார், வைத்தியசாலையை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மோப்ப நாயின் உதவியுடன் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த தேடுதல் வேட்டையில், Caverswall என்ற கிராமம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் Samantha-வின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எனினும், Samantha தான் என பொலிஸார் தரப்பில் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பிரித்தானிய முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில், 28, 32 மற்றும் 60 வயதுள்ள 3 நபர்களை பொலிஸார் கைது செய்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.

tags ;- woman Britain found dead after 8 days 3 people arrested

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************