கோட்டபாய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அமெரிக்க தூதரகம் தடை

0
685
US Embassy banned contest Gotabhaya Rajapaksa presidential election

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டபாய ராஜபக்ச போட்டியிடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை ஒன்றில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. (US Embassy banned contest Gotabhaya Rajapaksa presidential election)

கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்கள பத்திரிகையான திவயின இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகமவைச் சந்தித்த அமெரிக்க தூதரக அதிகாரிகள்,

கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்படும் நடவடிக்கைகள், வெள்ளைக்கொடி சம்பவம், அதாவது விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பான நடவடிக்கைகளை கோட்டபாய ராஜபக்ச நடைமுறைப்படுத்தினாரா என்பது குறித்து தெரிந்து கொள்வதிலும் அமெரிக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டியுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மெக்ஸ்வல் பரணகமவின் கருத்தை அறிய திவயின மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; US Embassy banned contest Gotabhaya Rajapaksa presidential election