இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
536
Today Horoscope 06-08-2018

 

இன்று! (Today Horoscope 06-08-2018)

விளம்பி வருடம், ஆடி மாதம் 21ம் தேதி, துல்ஹாதா 23ம் தேதி,
6.8.18 திங்கட்கிழமை, தேய்பிறை, தசமி திதி இரவு 4:01 வரை;
அதன் பின் ஏகாதசி திதி, கார்த்திகை நட்சத்திரம் காலை 10:48 வரை;
அதன்பின் ரோகிணி நட்சத்திரம், மரண, அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00-7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30-9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30-12:00 மணி
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : விசாகம்
பொது : சிவன் வழிபாடு.

மேஷம்:

உங்களின் நற்செயலை சிலர் விமர்சனம் செய்வர். அவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரம் கூடுதல் முயற்சியால் சராசரி இலக்கை அடையும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

 

ரிஷபம்:

செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம். கடினமான பணிகளில் விழிப்புடன் ஈடுபடவும். தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். மனைவி உதவிகரமாக நடந்து கொள்வார்.

மிதுனம்:

மனதில் கூடுதல் நம்பிக்கை கொள்வீர்கள்.தொழில், வியாபாரம் செழிக்க மாற்று உபா யம் பின்பற்றுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் சலுகை விலையில் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

கடகம்:

எண்ணம், செயலில் உற்சாம் நிறைந்திருக்கும். கூடுதல் உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணவரவில் திருப்திகரமான நிலை உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் முன்னேற தேவையான வழிவகை செய்வீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

சிம்மம்:

எதிரியால் இருந்த மறைமுகத் தொல்லை குறையும். வெற்றிப் பாதையில் பீடு நடை போடுவீர்கள்.தொழில் வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி ஏற்படும்.தாராள பணவரவு கிடைக் கும்.நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கன்னி:

பொது விஷயங்களில் கருத்து சொல்வதால் அவப்பெயர் ஏற்படலாம். தொழில் வியாபார நடை முறை தாமதகதியில் இயங்கும். மிதமான பணவரவு கிடைக்கும். பெண்கள் அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம்.

துலாம்:

எதிர்கால நலன்களை கவனத்தில் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள அனு கூலத் தன்மையை பாதுகாத்திடுவீர்கள். சேமிப்புப் பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

விருச்சிகம்:

உங்களின் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். பேச்சில் உற்சாகம் நிறைந் திருக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

தனுசு:

ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நண்பரின் வழிகாட்டுதல் உற்சாகம் தரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி உருவாகும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத் தேவை பெருமளவில் நிறைவேறும்.

மகரம்:

உறவினரின் கூடுதல் பாசம் வியப்பைத் தரலாம். எதிர்கால நலனில் கூடுதல் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியதிருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும்.ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

கும்பம்:

எதிர்மறை எண்ணம் உள்ளவரை சந்திக்க நேரிடலாம். திட்டமிட்ட பணி நிறைவேற்ற பொறுப்புணர்வு அவசியம். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும்.முக்கிய செலவுக்காக பணக்கடன் பெறுவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடு மன ஆறுதல் தரும்.

மீனம்:

புதியவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாக இருக்கும்.உபரி வருமானம் சேமிப்பாகும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.பெற்றோரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்