புதிய தொழிநுட்ப முறைக் கணினி சீனாவில் கண்டுபிடிப்பு!

0
374
 new technological system computer invention China tamil news

தொழிநுட்ப உலகின் அடுத்த தலைமுறைக்கான கணினி பொறியொன்று சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. new technological system computer invention China tamil news

விஞ்ஞான ஆய்வுகள், மருத்துவத் துறைக்கு பெரிதும் உதவும் வகையில் சீனாவில் இந்த விஷேட அதி தொழிநுட்ப கணினிப் பொறி தயாரிக்கப்பட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

குறித்த அதிதொழிநுட்ப கணினியானது தேசிய பொறியியல் மற்றும் தொழிநுட்ப ஆராய்ச்சி மத்திய நிலையம், தேசிய அதிதொழிநுட்ப கணினிகள் மத்திய நிலையம், கடல் சார்ந்த விஞ்ஞான மற்றும் தொழிநுட்பத்திற்கான தேசிய ஆய்வுகூடம் ஆகிய சீனாவின் முன்னணி நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இக்கணினி ஒரு செக்கனில் பில்லியன் கணக்கான கணிப்புக்களைச் செய்யும் வல்லமை படைத்தது.

அந்தவகையில், இது வானிலை அவதான முன்னறிக்கைகள், கடற் செயற்பாடுகளை உடனுக்குடன் தெரியப்படுத்தும் செயன்முறை, வர்த்தக கணக்குவழக்குகள், உயர் தொழிநுட்ப உபகரண தயாரிப்பு போன்றவற்றிற்கு உதவக்கூடியது.

கணனி தயாரிப்பில் முன்னணி வகிக்கும் நிறுவனமான தேசிய பொறியியல் மற்றும் தொழிநுட்ப ஆராய்ச்சி மத்திய நிலையமானது இன்னுமொரு புதிய படைப்பை எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- new technological system computer invention China tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்