சுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்!

0
387
Migrant Workers Centre tamil news

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் புலம்பெயர் பின்னணி கொண்ட தொழிலாளர்கள் சுரண்டலுக்குள்ளாவதைத் தடுக்கும் நோக்கில் இதற்கான சிறப்பு நிலையம் ஒன்று மெல்பேர்னில் திறக்கப்படுகிறது. Migrant Workers Centre tamil news

இம்மாதம் திறக்கப்படும் மெல்பேர்னைத் தளமாகக் கொண்ட Migrant Workers Centre, தற்காலிக மற்றும் நிரந்தர விசாக்களில் ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கும் உரிமைகள் பற்றிய விளக்கங்களையும் மேலும் சில பயிற்சிகளையும் வழங்கவுள்ளது.

புலம்பெயர் பின்னணி கொண்ட பணியாளர்களே வேலையிடங்களில் அதிகம் சுரண்டலுக்குள்ளாவதாக தெரிவிக்கப்படும் அதேநேரம் பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை மிகக்குறைவான ஊதியமே என சுட்டிக்காட்டிய Migrant Workers Centre-இன் நிர்வாகி Matt Kunkel, மணித்தியாலமொன்றுக்கு 8 டொலர்கள் முதல் 11 டொலர்கள் வரைகூட பலருக்கு ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

பல்வேறு மொழிபேசும் பணியாளர்களைக் கொண்ட தமது நிலையம் ஊடாக சுரண்டலுக்குள்ளாகும் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

tags :- Migrant Workers Centre tamil news