‘கிகி சேலஞ்ச் வெற்றியாளர்கள் இவர்கள்தான்’ – தெறிக்கவிட்ட இந்திய இளைஞர்கள்(காணொளி)

0
618
india tamilnews kiki challenger youth winners india tamilnews

வயலில் ஏர் கலப்பையை விட்டுவிட்டு சேற்றில் `கிகி சேலஞ்ச்’ செய்து உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டனர் நம் இந்திய விவசாய இளைஞர்கள்.india tamilnews kiki challenger youth winners india tamilnews

ஓடும் காரிலிருந்து இறங்கி, Kiki, do you love me? Are you riding? என்ற வரிகளைப் பாடிக்கொண்டே சாலையில் நடனம் ஆடும் `விபரீதம்’ தான் `கிகி சேலஞ்ச்’.

கனடாவின் பிரபல `ராப்’ பாடகர் டிரேக் கிரஹாமின் `In My Feelings’ பாடலை வைத்துத்தான் இந்த விபரீத சேலஞ்ச் தொடங்கியது. இதை ஆரம்பித்தவர் அமெரிக்க காமெடி நடிகர் ஷிக்கி.

உலகம் முழுவதும் வைரலான இந்த `கிகி சேலஞ்ச்’. இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியது. கடந்த சில வாரங்களாக இந்தியர்களும் கிகி சேலஞ்ச் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

`கிகி சேலஞ்ச்’ செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மும்பை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில், காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

போலீஸுக்கும் பெற்றோருக்கும் தலைவலி கொடுக்கும் இந்த கிகி சவாலை ரசிக்கும்படியாக வித்தியாசமாகச் செய்து உலகளவில் பிரபலமாகியுள்ளனர் இந்திய விவசாய இளைஞர்கள்.

தெலங்கானாவைச் சேர்ந்த அனில் குமார், பில்லி திருப்பதி என்னும் இரண்டு இளைஞர்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

காணொளி :

https://www.instagram.com/p/BmCR76WnkXy/?utm_source=ig_web_copy_link

source : trevornoah

இருவரும் இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவசாயத்தைப் பற்றியும் கிராம வாழ்க்கையின் ஸ்வாரஸ்யங்கள் பற்றியும் பகிர்ந்து வருகிறார்கள்.

வயலில் ஏர்கலப்பையை விட்டுவிட்டு சேற்றில் இறங்கி Kiki, do you love me? என்று நடனமாடும் இவர்களின் வீடியோ ரசிக்க வைக்கும்படி இருக்கிறது. `myvillageshow’ என்னும் இன்ஸ்டா பக்கத்தில் இந்த வீடியோ வெளியானது.

இவர்களின் கிகி சேலஞ்ச் குறித்து தென்னாப்பிரிக்கா திரைப்பிரபலம் ட்ரெவோர் நோவா `கிகி சேலஞ்ச்சில் வெற்றியாளர்கள் இவர்கள்தாம்’ என்று இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அவரின் பதிவால் `இந்திய கிகி சேலஞ்ச்’ இன்னும் பிரபலமாகிவிட்டது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :