உணவு ஒவ்வாமை; நால்வரும் பலி – வாதுவையில் சம்பவம்

0
664
Food allergy Four dead incident Wadduwa

வாதுவை பகுதியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் உணவு ஒவ்வாமையின் காரணமாக பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். (Food allergy Four dead incident Wadduwa)

கடந்த சனிக்கிழமை வாதுவை பகுதியிலுள்ள விருந்துபசார நிகழ்வொன்றில் உணவு வழங்கப்பட்டது.

இந்த உணவினை உட்கொண்ட நால்வர் பாதிப்புக்குள்ளாகி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

சிகிச்சை பலனின்றி இருவர் கடந்த சனிக்கிழமை இரவு உயிரிழந்த நிலையில், மற்றைய இருவருக்கும் தொடர்ந்தும் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மேலும் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நான்காவது நபரும் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

கஸ்பாவ, திவுலபிட்டிய மற்றும் வாதுவை பகுதிகளைச் சேர்ந்த 36 மற்றும் 20 வயதுடைய இருவர் மற்றும் 31 வயதுடையவரும் 28 வயதுடையவரும் உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக பாணந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லை.

20 பேர் வரையில் வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் போது ஹோட்டலில் பரிமாறப்பட்ட உணவு மற்றும் மதுபான வகைகள் தொடர்பில் மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்தில் சி.சி.டி.வி கமராக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Food allergy Four dead incident Wadduwa