முல்லேரியாவில் வீரத் தாய்; மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தவரை குத்தி கொலை

0
716
rakvana ten years old girl abuse fifty age men arrest latest Lankan news

முல்லேரியாவ பிரதேசத்தில் 5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சி செய்த குற்றச்சாட்டின் பேரில் 40 வயதுடைய நபர் ஒருவரை குறித்த சிறுமியின் தாய் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக முல்லேரியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். (Attempt sexually abuse 5 year old girl)

கொலை செய்யப்பட்டுள்ள நபர் முல்லேரியாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இந்தச் சிறுமியின் இல்லத்திற்கு சென்ற போது, அவளின் தாய் வீட்டில் இல்லாமையினால் இந்தச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டுள்ளார்.

இந்தச் சிறுமியின் தாய் வீடு திரும்பிய போது தனக்கு நடந்ததை தாயிடம் கூறவே, அவள் சந்தேக நபரிடம் சென்று வினவிய போது, இவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது இந்தச் சிறுமியின் தாய் சந்தேக நபரை கத்தியால் குத்தியுள்ளார்.

காயமடைந்த சந்தேக நபரை முல்லேரியாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளதாக முல்லேரியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக குறித்த சிறுமியின் தாயாரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் முல்லேரியாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Attempt sexually abuse 5 year old girl