சீனாவிடமிருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன் பெறுகிறது நல்லாட்சி!

0
438
Sri Lanka Obtain 1 Billion Dollar Loan China Development Bank

சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து, எட்டு ஆண்டுகளில் மீள் செலுத்தும் வண்ணம் ஒரு பில்லியன் டொலர் கடன் பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். Sri Lanka Obtain 1 Billion Dollar Loan China Development Bank Tamil News

இந்தக் கடன் தொகையின் முதற் பகுதியான 500 மில்லியன் டொலர் இந்த மாதம் சிறிலங்காவுக்கு கிடைக்கும். எஞ்சிய 500 மில்லியன் டொலர் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் கிடைக்கும்

இந்த கடனுக்கு மேலதிகமாக, 200 தொடக்கம் 250 மில்லியன் டொலர் வரையான நிதியை சீனாவின் உள்நாட்டு நிதிச் சந்தையில் இருந்து பண்டா பிணைகள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் மத்திய வங்கி ஆளுனர் கூறியுள்ளார்.

இந்தக் கடனுக்கு மூன்று ஆண்டு விலக்குக் காலத்துடன் கூடிய 5.25 வீதம் வட்டி செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites