எனது மகன் மிகவும் நல்லவன் ஒசாமா பின்லேடன் தாயார் முதன் முறையாக பேட்டி

0
80

அல் கொய்தா பயங்கரவாத தலைவரா இருந்த ஒசாமா பின்லேடன் குறித்து முதன் முறையாக அவரது தாய் அலியா கனெம் பேசியுள்ளார். son very good Osama bin Laden’s mother interviewed first time

பல வருடங்களாக அதிபயங்கர தீவிரவாதியாக வலம் வந்த ஒசாமா பின்லேடன் கடந்த 2011ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க படையால் கொல்லப்பட்டார்.

அவரது தாயார் உள்ளிட்ட குடும்பத்தினர் சவுதி அரேபியாவில் வசிக்கின்றனர். இந்த நிலையில அவரது தாயார் அலியா கெனெம், தி கார்டியன் இதழுக்கு பேட்டியளித்தார்.

தனது முதல் கணவருக்குப் பிறந்து இரண்டாவது கணவரால் வளர்க்கப்பட்ட தனது மகன், இளைஞனாக இருக்கும்போது ஒரு மதவாதக் குழுவால் மூளைச்சலவை செய்யப்பட்டு விட்டதாக அவர் தெரிவிக்கிறார்.

மேலும், “ஒசாமா, ஜித்தாவில் உள்ள கிங் அப்துலாசிஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றார். அப்போது மத தீவிரவாதிகள் சிலரால் அவர் மூளைச்சலவை செய்யப்பட்டார். இயல்பாக ஒசாமா கூச்ச சுபாவமுள்ள இளைஞனாகவே இருந்தார். ஆனால் சில குறிப்பிட்ட மதவாதிகளைச் சந்தித்தபின் வேறு ஒரு மனிதனாக மாறிவிட்டார்.

அவர்களிடமிருந்து விலகியிரு என்று அவனுக்கு சொல்லியும் அவன் கேட்கவில்லை. தனது நடவடிக்கைகளை அவன் என்னிடமிருந்து மறைத்துவிட்டான். ஆனால் அவன் என்னை மிகவும் நேசித்தான்.

ஒசாமா குறித்து பேச நான் வெட்கப்படவில்லை. அவரை , அவரது கூட்டாளிகள்தான் மாற்றி விட்டார்கள்” என்கிறார்.

சவுதி அரேபியாவில் அவரது குடும்பம் ஒரு பெரிய செல்வந்தக் குடும்பம். அவர்கள் தங்கள் கடந்த காலத்தை உதறிவிட்டு ஒரு புதிய வாழ்வை தொடங்க நினைக்கிறார்கள். ஆனால் ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்சாவும் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டுள்ளதால் குடும்பத்துக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

தவிர, உலகம் முழுவதிலும் உள்ள உளவுத்துறை நிறுவனங்கள், ஒசாமா பின்லேடனின் குடும்பத்தை இப்போதும் கண்காணித்துக்கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

tags :- son very good Osama bin Laden’s mother interviewed first time

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்