திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகியன இந்துக்களின் புனித தலமாக மாற்றப்பட வேண்டும்

0
381
naguleswaram thirukethiswaram rhirukoneshwaram should change mano

திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய தலங்கள், இந்துக்களின் புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். naguleswaram thirukethiswaram rhirukoneshwaram should change mano

இதற்கான அமைச்சரவை பத்திரத்தை, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, இந்து மத விவகார அமைச்சர் நண்பர் டி.எம். சுவாமிநாதன் அமைச்சரவையில் சமர்ப்பிக்க முன்வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய முயற்சிகளுக்கு அவசியமான ஒத்துழைப்புகளை வழங்க நான் தயாராக உள்ளேன் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் சுவாமிநாதனுக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
naguleswaram thirukethiswaram rhirukoneshwaram should change mano

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites