குற்றவாளிகளை தப்பிக்க வைத்த அரசு – காங்கிரஸ்

0
393
Congress accused government protecting fugitives bribed fraudulent

Congress accused government protecting fugitives bribed fraudulent

கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தப்பியோடியவர்களை மத்திய அரசு பாதுகாப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டில்லியில் ராகுல் தலைமையில் நடந்தது. இதில், உடல்நலக்குறைவு காரணமாக சோனியா பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில், தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல், ரபேல் போர் விமான ஒப்பந்தம் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியதாவது:

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல், ரபேல் ஒப்பந்தம், வேலைவாய்ப்பு, விவசாயிகள் பிரச்னை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல் தொடர்பாக செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும். பா.ஜ., அரசு தனது தோல்வியை மறைக்க முயற்சி செய்துள்ளது. பா.ஜ., ஆட்சியில் விலைவாசி 3 மடங்கு உயர்ந்துள்ளது.

இதற்கு அக்கட்சியால் பதில் சொல்ல முடியாது. ஏராளமான வங்கிமோசடிகளும் நடந்துள்ளன. மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிய குற்றவாளிகளுக்கு மத்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது. நிரவ் மோடி மீது 2015 – 17 ல் 47 வழக்குகள் இருந்தன.

ஆனால், அவர்களுக்கு நற்சான்றிதழை மத்திய அரசு அளித்துள்ளது. ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக போராடாமல், மக்களை திசைதிருப்புவதிலேயே அக்கட்சி கவனமாக உள்ளது. Congress accused government protecting fugitives bribed fraudulent

வரவிருக்கும் பல மாநில தேர்தலை எதிர்கொள்ளவும், வெற்றி பெற தேவையான நடவடிக்கைகளை துவக்கிவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

The post கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க குடியரசு தலைவர் வருகை appeared first on TAMIL NEWS.