தமிழர்கள் அதிகமாக பிள்ளை பெற வேண்டும்! இல்லையென்றால் இது தான் விளைவு!

0
970
Northern Province Education Minister Sarvesvaran Latest Speech

தமிழர்கள் அதிகமாக பிள்ளைகளை பெறவேண்டும் இல்லையேல் இன்னும் ஐந்து ஆண்டுகளில் நாங்கள் இலங்கையில் மூன்றாம் தர மக்களாக மாறிவிடுவோம் என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். Northern Province Education Minister Sarvesvaran Latest Speech Tamil News

யாழ்.மத்திய கல்லூரியின் 202 ஆவது பரிசில் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நான் ஒரு கல்வி அமைச்சராக வடக்கு மாகாணத்தின் பல பாடசாலைகளுக்குப் போயிருக்கிறேன். எமது மாகாணத்திலே 1010 பாடசாலைகள் இருக்கின்றன. இவற்றில் 120 பாடசாலைகள் 20 இற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்டிருக்கின்றன. 250 பாடசாலைகள் 50 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கின்றன.

ஒரு வருடத்திலே ஒரு வலயத்திலே ஆயிரம் மாணவர்கள் குறைவடைந்திருக்கிறார்கள் என்று சொன்னால் எங்களுடைய மாணவர்களின் எதிர்காலம்,எங்களுடைய இருப்பினுடைய எதிர்காலம் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் இடம்பெற்ற போர் ஒரு மில்லியன் தமிழ் மக்களை நாட்டை விட்டு வெளியேற்றியிருக்கிறது. இதை விட போராளிகள்,பொது மக்கள் உட்பட மூன்றறை லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களின் சந்ததிகளும் எங்களிடம் இல்லை. ஆகவே நாங்கள் மூன்று நான்கு தலைமுறையை இழந்திருக்கின்றோம்.

இப்போது இலங்கையின் சனத்தொகை பெருக்க விகிதம் முஸ்லிம்கள் ஆயிரம் பேருக்கு 8.7 பேர் அதிகரிக்கிறார்கள். சிங்களவர்கள் ஆயிரம் பேருக்கு 5.5 பேர் அதிகரிக்கிறார்கள் தமிழர்கள் 1.5 பேர் அதிகரிக்கின்றார்கள்.

இப்போது இருக்கின்ற சனத்தொகை வளர்ச்சி வீதத்தில் எமது இனம் சென்று கொண்டிருக்குமானால் நாங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் மூன்றாவது இனமாக சுருங்கி விடுவோம்.

எல்லோரும் அதிக குழந்தைகளைப் பெற்றேயாக வேண்டும்.

வேறு எந்த குறுக்கு வழிகளிலும் இதற்கு தீர்வு காணமுடியாது” என்று க.சர்வேஸ்வரன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites