கொந்தளித்த நாமல்!

0
272
we cant say place but picketing confirm namal rajapaksha

இந்த மாதம் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் ஊதியம் இரு மடங்காக அதிகரிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவு தொடர்பில் பல்வேறு வகையான தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. Namal Rajapakse Minister Salary

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

டுவிட்டர் ஊடாக அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:

” எம்.பி.களின் சம்பளத்தை உயர்த்து அரசாங்கத்தின் இந்த முடிவை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியும்?. குறிப்பாக மக்களின் உயரும் வாழ்க்கைச் செலவையோ, வரியயோ கட்டுப்படுத்த எதுவும் செய்தா நிலையில், இச்சம்பள அதிகரிப்பு அவசியமா? ”

என நாமல் கேள்வி எழுப்பியுள்ளர்.

எம்.பிக்களின் தற்போதைய சம்பளம் ரூபா. 54, 285 என்பதுடன் அத்தொகை 125,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. அதேபோல், 63,500 ரூபாவாக உள்ள பிரதி அமைச்சர்களின் சம்பளம் 135,000 ரூபாவாகவும், 65,000 ரூபாவாக உள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் சம்பளம் 140,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.